நிலவும்... மலரும்... [electronic resource]
Chokkalingam, Kalaivani2024
eBook
Find it!
அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த வசந்தமுல்லையிடம் சாப்பாட்டுப் பையுடன் வந்தாள் மல்லிகா. கண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறை சரிபார்த்துவிட்டு கைப்பையை எடுத்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்து புன்னகைத்தாள். "என்னம்மா?" "ம்? சா... ப்பாடு கொண்டு வந்தேன்.""கொடும்மா. டயமாச்சி" - என்றவாறே டிபன்பாக்ஸை எடுத்து கைப்பைக்குள் வைத்துக்கொண்டே நடந்த மகளை தயக்கமாய் பின்தொடர்ந்தாள் மல்லிகா. "மு...ல்லை!" "என்னம்மா?" "ஒண்ணுமே சொல்லாம போறியே..." "ஏம்மா! எப்பவும் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணிட்டுத்தானே பை சொல்வேன்? இன்னிக்கு என்ன?" "நான்... அதைக் கேட்கல!" "வேற?" "அதான்... அப்பா சொன்னாரே... அந்தப் பையனைப் பத்தி...""ம்ப்ச்! காலை மூட்-அவுட் பண்ணாதேம்மா. நான்தான் இப்போதைக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லியிருக்கேனில்ல?" - எரிச்சலாய் சொல்லிவிட்டு மேசை மீதிருந்த சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு விடுவிடுவென நடந்தவளை, அதே வேகத்தோடு பின்தொடர்ந்தாள் தாய். "இப்படிச் சொன்னால் எப்படிம்மா?" "வேற எப்படிச் சொல்லுவது?" "இல்ல... அவங்ககிட்ட என்ன சொல்றது?" "அவங்க பையனுக்கு வேற இடத்தில் பொண்ணு பார்த்துக்கச் சொல்லுங்க.""ஏய்... என்னடி... கொஞ்சம் யோசிச்சுச் சொல்லு. பையன் பார்க்க அழகா இருக்கான். நல்ல பையன்னு சொல்றாங்க. அதோட..." மல்லிகா பேசிக் கொண்டிருக்கும்போதே, போர்டிகோவில் நின்றிருந்த தன் இரு சக்கர வாகனத்தை நெருங்கி, கைப்பிடியில் மாட்டியிருந்த தலைக்கவசத்தை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்து உயிர்ப்பித்தாள். "நான் பேசிட்டே இருக்கேன். எதையாவது காதில் வாங்குறாளா?" முனகிக் கொண்டே சென்று வாயிற்கதவை அகலமாய் திறந்து வைத்த அன்னையின் அருகே வந்து வாகனத்தை நிறுத்...
Main title:
Author:
Imprint:
[Place of publication not identified] : Pocket Books, 2024
Collation:
1 online resource (1 text file)
ISBN:
9798224593750
Language:
English
Subject:
BRN:
4224944
More Information: